Friday, March 8, 2019

பைபிள் கூறுவது என்ன?

பைபிள் கூறுவது என்ன?

         கிறித்துவர்கள் பைபிளை மிகவும் போற்றுவதன் காரணம் என்ன? காரணம் அதில் கடவுளுடைய வார்த்தைகள் உள்ளன என்பதே.உண்மையில் பைபிள் எந்த மொழியில் எழுதப் பட்டது?தமிழ் மொழியில் நாம் படிக்கும் பைபிள் எந்த மொழியில் இருந்து மொழிபெயர்க்க பட்டது?மொழிபெயர்ப்பு அனைத்தும் சரிதானா?தவறுகளே இல்லையா?

                   உண்மையில் பைபிள் இரண்டு பாகங்களை கொண்டுள்ளது.அவைகள் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.பழைய ஏற்பாடு என்பதன் சரியான சொல்லாக்கம் "பழைய உடன்படிக்கை" என்பது ஆகும்.அதாவது கடவுளுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் இடையே ஏற்படுத்தப் பட்டிருந்த ஒரு உடன்படிக்கை ஆகும்.சினாய் மலையில் வைத்து அவ்வுடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டது.யாத்திராகமம்  புத்தகத்தில் அது உள்ளது.எனவே இந்த உடன்படிக்கை கடவுளால் நேரடியாக ஏற்படுத்தப் பட்டது.
                              
                            இரண்டாவது உடன்படிக்கை என்பது எது?யார் அதனை ஏற்படுத்தியது?யாருடன் அது ஏற்படுத்தப் பட்டது?அது உருவாவதற்கு ஏதாவது காரணம் இருந்ததா?உடன்படிக்கை என்பது மிகவும் ஆபத்தான சொல்லாக இருக்கிறது.உடன்படிக்கை என்பது மீறப்பட்டால் ,அவ்வுடன்படிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் சாபங்கள் அல்லது தண்டனைகள் மீறியவர்கள் மீது வரும்.அதற்கு இஸ்ரேல் மக்களே சாட்சி.

                            உண்மைகள் மிகவும் பல நேரங்களில் அதிர்ச்சியாக இருக்கும்.கீழ்கண்ட என்னுடைய கூற்றுகளை பாருங்கள்.

1.இரண்டாவது உடன்படிக்கை என்பது இஸ்ரயேல்  மக்களுக்காக கடவுள் கூறியது ஆகும்.எரேமியாவில் அதற்குரிய வசனம் உள்ளது.புறஜாதிகளுடன் அல்ல.

2.தமிழ் பைபிளில் ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பு தவறுகள் உள்ளன.

           தொடர்ந்து இப்பக்கத்தை பாருங்கள்.ஒவ்வொரு தவறாக நாம் சுட்டிக் காட்டி அதற்குரிய விளக்கங்களை கொடுக்க இருக்கிறோம்.


No comments:

Post a Comment

My Posts