கேள்வி: நான் நியாயப்பிரமாணத்தை படிக்கும் பொழுது அதனுடைய அழகைக் கண்டு வியக்கிறேன்.என்னால் முடிந்த வரையில் அதனை கடைபிடிக்க முயல்கிறேன்.ஆனால் அதில் உள்ள ஒன்று என்னை மிகவும் குழப்புகிறது.கொடுமைகளையும் சண்டைகளையும் அது ஏன் நியாயப்படுத்துகிறது?அமலேக்கியர்களையும் கானானியர்களையும் நாம் ஏன் முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்? மரண தண்டனை ஏன் கொடுக்கப்படுகிறது? கடவுளுடைய செய்தி உண்மையில் அன்பாக அல்லவா இருக்க வேண்டும்?எனக்கு ஏதாவது புரிய வில்லையா? நீங்கள் கொடுக்க இருக்கும் விளக்கத்துக்கு முன்னதாகவே என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதில்: நீங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் விட வில்லை.ஒருவேளை அவைகள் உங்களுக்கு சரி என்று பட்டிருந்தால்தான் எனக்கு ஆச்சரியம்.உண்மையில் மேற்கூறிய செய்திகள் உங்களை பாதிக்கிறது என்று நீங்கள் கூறியதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல ஆத்மாவைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது காட்டுகிறது.நியாயப்பிரமாணம் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு இனிப்பானது அல்ல.பலரும் நினைப்பது போல் உண்மை அவ்வளவு இனிமையானது அல்ல.காண்பதற்கு மிகவும் அழகான முகங்கள் கூட நாம் பார்ப்பது போல் உண்மையில் அவ்வளவு அழகானது அல்ல.பதிலாக பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்ததோ அதே அளவு கசப்பும் அது பல நேரங்களில் கொண்டிருக்கும்.அழகு என்று நாம் நினைப்பதை நெருங்கி சென்று பார்த்தால் நரகம் போன்ற அசிங்கத்தைக் கொண்டிருக்கும்.நியாயப்பிரமாணம் என்பது மிகவும் ஆழமான உண்மையாகும்.ஒரு மனிதனுடைய ஆழ்மனதை அது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.மனிதனுடைய ஆழ் மனது என்பது மிகவும் குழம்பிப் போய் இருக்கும் குட்டை போன்றது.முப்பது வருடங்களுக்கு மேலாக என்னை குழப்பிக் கொண்டிருந்த ஒரு செய்தியைத்தான் நீங்கள் இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.ஒரு சிறிய நிகழ்ச்சி எனக்கு ஒரு தீர்வை கொடுத்தது போன்று தோன்றியது.ஆனால் அதனுடன் நான் திருப்தி பட்டுக்கொன்டேன் என்று என்னால் உறுதியாகக் கூற இயலாது.நியாயப்பிரமணத்தைக் குறித்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேனா அல்லது என்னை உருவாக்கியவரும் நியாயப்பிரமாணத்தை உருவாக்கியவரும்(இந்த உலகத்தையும் கூடத்தான்)விரும்புகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை.நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளை நாம் ஒத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்றால் நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்வோம்?ஆனால் நாம் அதை ஒத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்பதை அந்த நிகழ்ச்சி எனக்கு சுட்டிக்காட்டியது.
"Tai Chi" என்ற சீன சண்டைக்கலையை நான் கற்றுக்கொண்டிருந்தேன்.ஒரு அமைதியான,நல்ல மனிதரான சீன குருவினுடைய மாணவரிடமிருந்து அக்கலையை நான் கற்றுக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் நீண்ட கத்தி ஒன்றை அவர் கொண்டு வந்தார்.அக்கத்தியை கொண்டு சுழற்ற வேண்டிய வழி முறைகளை சொல்லிக்கொடுப்பதற்காக அவர் அதைக் கொண்டு வந்தார்.அவர் தனி ஒரு ஆளாக அதை செய்து காண்பித்தார்.அவர் செய்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.ஆனால் அதே அளவுக்கு கொடூரமாகவும் இருந்தது.
இந்த "Tai Chi"என்ற சண்டை காலையில் இவ்வகையான கத்தி சுழற்றல்கள் அவசியமா என்று நாங்கள் அவரிடம் கேட்டோம்.மிகவும் சாதாரணமான அடிப்படை கத்தி அசைவுகள் கூட எதிராளிக்கு மிகவும் வலியை தரக்கூடிய காயத்தை அது ஏற்படுத்தும்.இவ்வகையான அசைவுகள் அக்கலையில் இருக்க வேண்டியது அவசியமா?
மேற்கூறிய வகையான அசைவுகள் இல்லாத ஒரு அமைதியான "Tai Chi" கலையை உருவாக்க சில அமெரிக்க இளஞ்சர்கள் முயன்றதாக அவர் எங்களிடம் கூறினார்.அனல் அவருடைய குரு இதை கேட்ட பொழுது அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்.
"Tai Chi" கலை என்பது "ஒருமுகப்படுத்தல்" மற்றும் "சமநிலைப்படுத்துதல்" ஆகும்.வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.உண்மையில் ஒரு மனிதனுக்கு பின் வாங்கவும் தெரிந்திருக்க வேண்டும் தாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.அவனுக்கு,ஒரு முயலாகவும் இருக்க தெரிய வேண்டும்,ஒரு சிங்கமாகவும் சிங்கமாகவும் இருக்க தெரிந்திருக்க வேண்டும்.அப்பொழுதே வாழ்கை சமநிலை அடைந்திருக்கும் மற்றும் நன்றாகவும் இருக்கும், என்று அவர் கூறினார்.
மனிதர்களிலேயே மிகவும் அறிவாளியாகிய சாலொமோனுடைய பிரசங்கியின் வார்த்தைக்கு அவருடைய வார்த்தை ஒத்துப்போனது.
1."ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு"
- 2.பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;
3. கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;
4. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;
5. கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
6. தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு
- 7.கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
- 8. சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.
வாழ்கை என்பது ஒரு நிலையிலேயே இருக்காது.அழகிற்கும் உண்மைக்கும் இடையே உள்ள தொடர்பை போல வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்.
இன்றைய இஸ்ரேலில் இதை நான் இன்று பார்க்கிறேன்.இந்த சமநிலைப்படுத்தும் திறன் வேண்டும்.இப்படி இல்லாமல் வாழ இயலாது.ஒரே நேரத்தில் புறாவாகவும் இருக்க தெரிய வேண்டும் கழுகாகவும் இருக்க தெரிய வேண்டும்.அமைதிக்காகவும் போருக்காகவும் இளைஜர்களை தயார் செய்கிறோம்.தீர்க்கதரிசிகள் கூறிய மேசியாவின் காலங்களில்,ஓநாயானது ஆட்டுக்குட்டியுடனே படுத்துக்கொள்ளும்.ஆனால் ஓநாய் ஓநாயாகவே இருக்கும்.அதுபோல ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டியாகவே இருக்கும்.
"https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment